மாவட்ட செய்திகள் மே 28,2023 | 17:33 IST
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஓசனூத்து கிராமத்தில் சுடலைமாடசாமி, கருப்பசாமி, மொட்டையசாமி கோயில் கொடை விழா முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. சின்ன மாட்டு வண்டி போட்டியில் 27 வண்டிகளும், தேன் சிட்டு மாட்டு வண்டி போட்டியில் 15 வண்டிகள் கலந்து கொண்டன. போட்டிகளை அயிரவன்பட்டி முருகேசன் பாண்டியன், தொடங்கி துவக்கி வைத்தார். 6 மைல் தூரம் நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசு மேல மருதூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாட்டு வண்டி, 2 வது பரிசு நெல்லை டேவிட் பாண்டியன் மாட்டு வண்டி, 3 வது ஓட்டப்பிடாரம் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா கணேசன் மாட்டு வண்டி, 4 பரிசு பொம்மையாபுரம் நஞ்சிதா குட்டி மாட்டு வண்டியும் பெற்றன. 4 மைல் தூரம் நடைபெற்ற தேன் மாட்டு வண்டி போட்டியில் முதலிடத்தை குமராபுரம் மல்லையா மாட்டுவண்டியும், 2 வது இடம் கன்னக்கட்டை மாநாட்டு மாடன் மாட்டு வண்டியும், 3 வது இடத்தை மேட்டூர் அழகர் பெருமாள் வண்டியும், 4 வது செக்காரக்குடி அபிநயா மாட்டு வண்டியும் பெற்றன. பொதுமக்கள் சாலையின் இருபுறங்களில் நின்று ஆராவாராம் செய்தனர்.
வாசகர் கருத்து