மாவட்ட செய்திகள் மே 28,2023 | 19:15 IST
தமிழகத்தில் சமீபத்தில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்தனர். சாராயத்தில் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக மெத்தனால் கலந்தால் அது உயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மது குடித்து பழகியவர்கள் அதிக போதைக்காக விலை குறைவாக கிடைக்கிறது என்பதற்காக கள்ளச்சாராயத்தை குடிக்கிறார்கள். மெத்தனால் அதிகம் கலந்தால் அது எல்லா உடல் உறுப்புகளையும் பாதிக்கிறது. இந்தியாவில் 5 சதவீதம் பேர் அதிகப்படியான மது குடிப்பதால் இறப்பதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. வயது ஆக ஆக மது குடிப்பவர்கள் அதன் அளவை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மது குடிக்கும் அளவை குறைத்தாலே அது நமக்கு கிடைத்த பாதி வெற்றி. இதன் வாயிலாக அவர்களை நீண்ட நாட்களுக்கு மது குடிக்காமல் செய்ய முடியும். இது தவிர குடியிலிருந்து மீண்டோர் மையமும் ஏற்படுத்த வேண்டும். ஆனால் அத்தகைய மையங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லை. இந்த மையத்தில் ஆகும் செலவு சரக்கு அடிக்க ஆகும் செலவை விட குறைவு தான். எனவே நாட்டுக்கும். வீட்டுக்கும் பேரழிவை ஏற்படுத்தும் மது குடிப்பதால் ஏற்படும் தீமைகள், அதிலிருந்து விடுபடுவது எப்படி? என்று விளக்குகிறது இந்த வீடியோ தொகுப்பு.
வாசகர் கருத்து