அரசியல் மே 29,2023 | 00:00 IST
அமைச்சர் பேச்சால் திகைத்த அதிகாரிகள் | #Dmk | #MinisterNehru நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பாக திண்டுக்கல்லில் 132 கோடி மதிப்பு திட்டப்பணிகள் துவக்க விழா நடந்தது. பூமி பூஜை முடிந்ததும் திட்டத்தின் செயல் விளக்கம் குறித்து அமைச்சர் நேரு மற்றும் பெரியசாமியிடம் அதிகாரிகள் விளக்கினர். அப்போது குறுக்கிட்ட அமைச்சர் நேரு என்ன கொடுத்தாலும் சரி பணம் கொடுத்தாகணும் என சொல்லி சிரித்தார். அமைச்சரின் இந்த பேச்சு திட்டத்துக்கு நிதி ஒதுக்க வேண்டுமா? அல்லது கமிசன் கொடுக்க வேண்டுமா என புரியாமல் அதிகாரிகள் திகைத்தனர்.
வாசகர் கருத்து