பொது மே 30,2023 | 14:45 IST
சென்னை செம்பியத்தை சேர்ந்த திருமணமான 30 வயது பெண் நிலப் பிரச்சனை தொடர்பாக புகார் செய்ய செம்பியம் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றார். முதல் நிலை காவலர் வினோத் குமார் 32 விசாரணைக்காக பெண்ணின் செல்போன் நம்பரை வாங்கினார். விசாரணை என்ற பெயரில் அந்தப் பெண்ணுக்கு அடிக்கடி போன் செய்தார். பிறகு அநாகரிகமான முறையில் மெசேஜ்களை அனுப்பத் தொடங்கினார். எல்லை மீறியதால் பெண் மன உளைச்சல் அடைந்தார். கணவரிடம் சொல்லி அழுதார். போலீசுக்கு புத்தி புகட்ட கணவர் முடிவு செய்தார். அதிகாலை 3 மணிக்கு தன் வீட்டுக்கு வரும்படி பெண்ணின் மொபைலில் இருந்து வினோத்குமாருக்கு கணவர் மெசேஜ் டைப் செய்து அனுப்பினார்.
வாசகர் கருத்து