மாவட்ட செய்திகள் மே 30,2023 | 14:50 IST
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே தேவராயன்பேட்டை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் தற்போது முன்பட்ட குறுவை நடவு பணிகள் துவங்கப்பட்டுள்ளது. உள்ளூர் பகுதியில் ஆள்பற்றாகுறை. கூலி உயர்வு போன்ற பிரச்சனையால் நாற்று நடும்பணி உள்பட விவசாய பணிக்கு மேற்குவங்க மாநிலத்தில் இருந்து தொழிலாளர்கள் வரவழக்கப்பட்டு விவசாய பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். வடமாநில தொழிலாளர்கள் வருகையால் உள்ளூர் விவசாய தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வாசகர் கருத்து