மாவட்ட செய்திகள் மே 30,2023 | 15:32 IST
ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசமங்கை திருப்புல்லாணி செல்லும் ரோட்டில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே வேட்டை மண்டபம் உள்ளது. மண்டபத்தின் கிழக்குப் பகுதியி்ன் உத்தரத்தில் இருந்த பாடல் கல்வெட்டை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, விமல்ராஜ், திருப்புல்லாணி தொன்மைப் பாதுகாப்பு மன்ற மாணவன் மனோஜ் ஆகியோர் கண்டுபிடித்தனர். தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் உதவியுடன் பாடலை படித்தனர். நான்கு வரியில் இருக்க வேண்டிய வெண்பா பாடல் 3 வரியில் இருந்தது.
வாசகர் கருத்து