மாவட்ட செய்திகள் மே 30,2023 | 15:16 IST
ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கரில் பழமை வாய்ந்த கனககுஜம்மாள் சமேத சோழபுரீஸ்வரர் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று 7 ம் நாளில் தேரோட்டம் நடந்தது. சுவாமிக்கு சிறப்பு பூஜை அபிஷேகம் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட தேரில் சோழபுரீஸ்வரர் கனககுஜம்பாள் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். சோளிங்கர் மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திக்கடனை செலுத்தி சாமியை வழிபட்டனர்.
வாசகர் கருத்து