மாவட்ட செய்திகள் மே 30,2023 | 15:57 IST
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் மகாலிங்கசுவாமி கோயிலில் திருக்கல்யாணம் கோலாகலமாக நடந்தது. சீர்வரிசைகள் சமர்பித்தல், மாலை மாற்றும் வைபவம், ஊஞ்சல் மற்றும் நலங்கு வைத்தல் நிகழ்வு நடந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஜபிக்க, அக்னி வளர்த்து திருமாங்கல்ய தாரணம் செய்தனர். சுவாமி மற்றும் அம்பாளுக்கும் கோபுர ஆர்த்தியுடன் 16 விதமான சோடச உபசாரங்கள், பஞ்சார்த்தியும் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து