மாவட்ட செய்திகள் மே 30,2023 | 00:00 IST
தமிழகத்தில் வருவாய் துறை அலுவலர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை கண்டித்து இன்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டகலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் கோவை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 50-க்கும் மேற்பட்ட வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் தாக்குதல்களை கண்டித்தும் தமிழக அரசு இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பினர்.
வாசகர் கருத்து