மாவட்ட செய்திகள் மே 30,2023 | 18:28 IST
தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வெளுத்து வாங்கியது. அக்னிநட்சத்திர வெயில் முடிந்த நிலையில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டமாக இருந்தது. கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியான கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர், புதுப்பட்டி, அனுமந்தன்பட்டி பகுதியில் மாலை நேரத்தில் கன மழை பெய்தது. ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை வெளுத்து வாங்கியது. கம்பம் பள்ளத்தாக்கு பகுதி முழுவதும் வெப்பம் தணிந்து தற்போது குளிர்ந்த காற்று வீசி வருகிறது. பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வாசகர் கருத்து