மாவட்ட செய்திகள் மே 30,2023 | 20:24 IST
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை தொடங்கியது. பேச்சியம்மன், விநாயகர், முத்துமாரியம்மன் தேரில் எழுந்தருளினர். மங்கள இசை முழங்க ஆயிரக்கணக்கான பெண்கள் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
வாசகர் கருத்து