மாவட்ட செய்திகள் மே 31,2023 | 11:36 IST
விருதுநகர் வெயில் உகந்த அம்மன் கோயிலில் வைகாசி விழா கடந்த 23 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் விழா நேற்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. பக்தர்கள் 21 அக்னி சட்டி, 51 அக்னி சட்டி எடுத்தும், கரும்புத் தொட்டில் கட்டியும், அலகு குத்தியும் நேர்த்திக்கடனை செலுத்தினர். நாளை தேரோட்டம் நடைபெறும்.
வாசகர் கருத்து