மாவட்ட செய்திகள் மே 31,2023 | 12:13 IST
மதுரை மாவட்டம் மேலூர் சாத்தமங்கலம் ஸ்ரீஹரிஹர அய்யனார் கோயிலில் வைகாசி மாத புரவி எடுப்பு திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இ.மலம்பட்டி குதிரை பொட்டலில் வைக்கப்பட்டிருந்த காளை மற்றும் இரண்டு சீமைகுதிரை, (புரவி) பக்தர்கள் நேர்த்திக்கடன் குதிரைகள், சுவாமி மற்றும் அம்மன் சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்கிருந்து 10 கிலோ மீட்டர் தூரமுள்ள சாத்தமங்கலம் மந்தைக்கு பக்தர்கள் தோலில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்தனர். சாத்தமங்கலம் மந்தையில் வைக்கப்பட்ட கோயில் சீமைகுதிரை உள்ளிட்ட நேர்த்திக்கடன் குதிரைகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
வாசகர் கருத்து