மாவட்ட செய்திகள் மே 31,2023 | 12:49 IST
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட போயம்பாளையத்தைச் சேர்ந்தவர் ரவிக்குமார்; டெய்லர். இவரது மனைவி ஜோதிமணி. தம்பதியரின் மூத்த மகன் உபநிஷாந்த், 15. இளைய மகன் திஷாந்த், 5. தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், 20, 21ம் தேதிகளில் நடந்த தேசிய அளவிலான மாடலிங் போட்டியில், 13 - 18 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் உபநிஷாந்த், 8 - 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் திஷாந்த் பங்கேற்றனர். புதுமையான ஆண்கள் ஆடை ரகங்களை அணிந்து, பேஷன்ஷோவில் பங்கேற்றனர். நேர்முகத் தேர்வில் தேர்வாயினர். இதையடுத்து, தேசிய அளவிலான மாடலிங் போட்டியில், உபநிஷாந்த் முதலிடம்; திஷாந்த் மூன்றாமிடம் பிடித்தனர். செப்., 21ல் தாய்லாந்தில் நடைபெறும் சர்வதேச அளவிலான மாடலிங் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை, உபநிஷாந்த், திஷாந்த் பெற்றுள்ளனர். இருவரும், 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் டீன் சூப்பர்' பிரிவில் இந்தியா சார்பில் பங்கேற்க விரைவில், தாய்லாந்து செல்கின்றனர்.
வாசகர் கருத்து