மாவட்ட செய்திகள் மே 31,2023 | 13:09 IST
நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் குரும்பர், பனியர், காட்டுநாயக்கர் சமுதாய பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். இதில் பனியர் சமுதாய மக்கள் பொன்னானி, அம்பலபாடி பகுதியில், பழங்குடியினர் தங்கள் குல தெய்வமான மாரியம்மனுக்கு நள்ளிரவு பூஜை செய்தனர். தொடர்ந்து ஆற்றங்கரையோரம் உள்ள தம்புராட்டி அம்மன், குளியன், வனபகவதி தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து தேங்காய் உடைத்து அருள்வாக்கு கூறி, அரிசியை பிரசாதமாக வழங்கினர். பழங்குடியினர் கலாச்சார நடனம் அனைவரையும் கவர்ந்தது. இதில் பழங்குடியினர் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து