மாவட்ட செய்திகள் மே 31,2023 | 14:25 IST
தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இயங்கும் கள்ளர் சீரமைப்பு துறை பள்ளிகளை பள்ளி கல்வித்துறையுடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி மாவட்டம் பெரியகுளம் எ.புதுப்பட்டியில் அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளியின் முன்பு பிரமலைக்கள்ளர் சீரமைப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். கள்ளர் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையிடம் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கள்ளர் சீர் மரபினருக்கு வழங்கப்படும் இரட்டைச் சான்றிதழ் முறையை கைவிட்டு, ஆங்கிலேயர் காலத்தில் வழங்கப்பட்ட டி.என்.டி ஒற்றைச் சான்றிதழ் வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வாசகர் கருத்து