மாவட்ட செய்திகள் மே 31,2023 | 20:22 IST
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பஜாரில் அழகுலிங்கம் என்பவர் நகை பட்டறையும், பட்டறைகளுக்கு தேவையான தளவாட சாமான்கள் விற்பனை செய்கிறார். சாத்தான்குளம் பகுதியில் காலையில் இருந்து மழை பெய்தது. கழிவு நீர் ஓடையில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறியது. கழிவுநீருடன் வந்த கொம்பேறி மூக்கன் பாம்பு அழகு லிங்கத்தின் பட்டறைக்குள் சென்று தளவாட பொருட்களுக்குள் மறைந்து கொண்டது. அழகுலிங்கம் சாத்தான்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். தீயணைப்பு துறையினர் கடையில் இருந்த பொருட்களை வெளியே எடுத்து மூலையில் இருந்த சிறிய அளவிலான கொம்பேறி மூக்கன் பாம்பை பிடித்து காட்டுப்பகுதிக்குள் விட்டனர்.
வாசகர் கருத்து