மாவட்ட செய்திகள் மே 31,2023 | 20:40 IST
காரைக்கால், செருமாவிலங்கு பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியற் கல்லூரி 2ம் ஆண்டு மாணவர்கள் கமலநாதனும் 19, சுடரொளி 19 இருவரும் மதிய உணவு சாப்பிட டுவீலரில் ஹோட்டலுக்கு சென்றனர். தக்களுர் அருகே சென்ற போது பின்னால் வந்த கண்டெய்னர் லாரி மோதியதில் தவறி விழுந்தனர். இதில் கமலநாதன் மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். காவல்துறை, ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதமானதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அப்பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டதால் சுமார் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் கமலநாதனின் உடலை சுமந்து மாணவர்கள் சாலையில் நடந்து சென்றதால் அப்பகுதியில் பதட்டமும், பரபரப்பும் நிலவியது. அதற்குள் காவல்துறையின் ஆம்புலன்ஸ் வாகனம் வந்ததும் போலீசார் மாணவர்களை சமாதானம் செய்து கமலநாதன் உடலை கைப்பற்றி சென்றனர். காயமடைந்த சுடரொளியை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நகர போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து