மாவட்ட செய்திகள் மே 31,2023 | 21:09 IST
சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையைச் சேர்ந்த ஒரு பயணி துபாயிலிருந்து வந்தார். சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்து சோதனை செய்தனர். சூட்கேஷில் ரகசிய அறை இருந்ததை கண்டுபிடித்தனர். உடைத்து பார்த்த போது கருப்பு கார்பன் பேப்பரில் , 10 தங்க கட்டிகள் இருந்தன. சூட்கேசை ஸ்கேன் செய்ததில், ஸ்கேனில் தங்கக் கட்டிகளை மறைப்பதற்காக கருப்பு கார்பன் பேப்பர்களில் சுற்றி எடுத்து வந்தது தெரிந்தது. 10 தங்கக் கட்டிகளின் எடை ஒரு கிலோ 165 கிராம் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 63 லட்சம். பயணியை கைது செய்து தங்க கட்டிகளை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து