மாவட்ட செய்திகள் மே 31,2023 | 21:45 IST
திருச்சி, சங்கிலியாண்டபுரம்ஆனந்த வெங்கடேஷின் மகன் பத்மேஷ் சாய்தேவ். 3ம் வகுப்பு படிக்கிறார். யோக கலையில் சக்ராசனத்தில் தலைகீழாக மாடி படி ஏறுவதில் சிறந்து விளங்கினார். கடந்த மாதம், திருச்சி மலைக்கோட்டையில் சக்கராசனம் முறையில், 45 நிமிடத்தில், 410 படிகளை ஏறினார். இன்று திருப்பூர் மாவட்டம், காங்கயம் சிவன்மலை கோவிலில் 496 படிகளை, 35 நிமிடங்களில் ஏறி, சோழன் புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
வாசகர் கருத்து