பொது ஜூன் 01,2023 | 00:00 IST
புதுச்சேரி போலீஸ் ஐ.ஜி. சந்திரன் நேற்று பணி ஓய்வு பெற்றார். அவருக்கு கோரிமேடு போலீஸ் மைதானத்தில் பணி நிறைவு அணிவகுப்பு மரியாதை நடந்தது. ஏற்புரையாற்றிய சந்திரன், “போலீசாரின் சீரிய பணியால் புதுச்சேரி அமைதியான மாநிலமாக திகழ்கிறது. அதனால் தான் வெளியூர்களில் இருந்து வருபவர்கள் புதுச்சேரியிலே தங்கி விடுகின்றனர். போக்குவரத்து சீரமைப்பு மற்றும் போதை பொருள் தடுப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தினால் மாநிலம் மேலும் சிறப்பாக திகழும்” என்றார்.
வாசகர் கருத்து