மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 12:56 IST
புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மேலப்புதுவயலைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் கார்த்திக் வயது 23. இவர் இரண்டு ஆண்டுகளாக மொபைலில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்துள்ளார். இதில் 3 லட்ச ரூபாய் இழந்தார். கடன் அதிகமானதால் நேற்றிரவு வீட்டில் விஷம் அருந்தி மயங்கினார். கீரனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். கீரனூர் போலீசார் பூச்சிக்கொல்லி மருந்தை குடிக்கும் முன் கார்த்தி எழுதிய கடிதத்தை கைப்பற்றி விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து