மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 12:58 IST
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி வடக்கு தெருவில் அமைந்துள்ளது பழமையான விநாயகர் கோயில். இங்கு காளியம்மன் மற்றும் பகவதி அம்மனுக்கு தனித்தனி சன்னதி உள்ளது. ராமேஸ்வரம், திருப்பரங்குன்றம், கொடுமுடி, பழனி உள்ளிட்ட நதிகளில் இருந்து புனித நீர் கலசங்களில் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்து கோயில் கோபுரத்திற்கு கலசநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக நடந்தது. திரளான பக்தர்கள் ஓம் சக்தி, பராசக்தி என பக்தி கோஷமிட்டனர்.
வாசகர் கருத்து