மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 00:00 IST
தஞ்சாவூர் வெண்ணாற்றங்கரை அருகில் நீலமேகப் பெருமாள், மணிக்குன்றப் பெருமாள், வீரநரசிம்மர் என மூன்று வடிவங்களில் பெருமாள்கள் தனித்தனி கோவில்களில் அருள்பாலிக்கிறார். நீலமேகப் பெருமாள் கோவிலில் வைகாசி பிரமோற்சவம் 9 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழா மே 25ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது, முக்கிய நிகழ்வாக நேற்று இரவு ஸ்ரீ செங்கமல வல்லி தாயார் சமேத ஸ்ரீநீலமேகப் பெருமாள் திருக்கல்யாணம் நடைபெற்றது, மாலை மாற்றும் நிகழ்வு, கன்னிகாதானம், மாங்கல்ய தாரணம் நடைபெற்று மஹா தீபாரதனை காட்டப்பட்டது, ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்
வாசகர் கருத்து