மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 14:31 IST
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழைால் ஆண்டிப்பட்டி தெப்பம்பட்டி ரோட்டில் உள்ள ரயில்வே பாலத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பகுதியில் செல்லும் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பொறுமையிழந்த பொமக்கள் தேனி மதுரை ரோட்டில் அமர்ந்து ரோடு மறியலில் ஈடுபட்டனர். ஆண்டிபட்டி போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். ரயில்வே பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். தேனி மதுரை ரோட்டில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாசகர் கருத்து