மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 15:13 IST
கள்ளக்குறிச்சி, பள்ளக்காட்டை சேர்ந்தவர் துரைசாமி. விவசாயி. நண்பரின் மகள் திருமணத்திற்கு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் சென்றார். நிகழ்ச்சி முடித்து வீடு திரும்பியவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 25 பவுன் தங்க நகை, பணம் திருடு போயிருந்தது. சின்னசேலம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து