மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 15:29 IST
திருச்சி பொன்மலையில் மத்திய அரசு நிறுவனமான ரயில்வே தொழிற்சாலையில் ரயில் பெட்டிகள், ரயில் இன்ஜின்கள் பழுது பார்க்கும் பணி நடக்கிறது. வெளி மாநிலம் மற்றும் தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்து உதிரி பாகங்கள் லாரிகளில் கொண்டு வருவதும் எடுத்து செல்வதும் வழக்கம். ரயில்வே போலீசார் சோதனை செய்கின்றனர். போலீசார் இரவு ரோந்து சென்ற போது பொன்மலை கேந்திர வித்யாலயா பள்ளியருகே நின்ற லாரியை சோதனை செய்தனர். லாரியில் ரயில் என்ஜினுக்கு பயன்படுத்தப்படும் ரூ.50 லட்சம் பெறுமான ரயில் இன்ஜின் மின்மோட்டார் இருந்தது. லாரி டிரைவர் கோபால் மற்றும் மணிகண்டனை விசாரித்தனர். கிளீனிங் ஒர்க் காண்ட்ராக்ட் எடுத்துள்ளதாகவும் தேவையற்ற குப்பை மற்றும் மணல்களை அள்ளிக் கொண்டு வெளியே கொட்டவரும் போது மின் மோட்டாரையும் மறைத்து எடுத்து வந்ததை ஒப்புக்கொண்டனர். இருவரையம் ரயில்வே போலீசார் சிறையில் அடைத்தனர். பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கிரண், சப்இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம், தலைமை காவலர் சதீஷ்குமார் மூவரையும் தெற்கு ரயில்வே பாதுகாப்பு படை தலைமை கமிஷனர் ஈஸ்வர ராவ் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
வாசகர் கருத்து