மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 15:38 IST
சிவகங்கை தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயிலில் யாகசாலை பூஜை கடந்த 30 ம்தேதி முதல்கால பூஜைகள் தொடங்கியது இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி மஹா பூர்ணாகுதியுடன் நிறைவு பெற்றது. புனித நீர் கடம் புறப்பட்டு கோயிலை சுற்றி வலம் வந்து இராஜகோபுரம், மூலஸ்தானம் மற்றும் நவகிரகம், பிடாரி அம்மன் சன்னதி, கணபதி சன்னதி, முருகப்பெருமான் சன்னதி, சுயம் பிரகாஷ்வரர் சன்னதி, அடைக்கலம் காத்த அய்யனார் சன்னதி விமான தங்க கலசங்களுக்கு சிவாச்சாரியார்களால் வேதமந்திரம் முழங்க புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வாசகர் கருத்து