மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 15:40 IST
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தர்ம முனீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக விழாவிற்காக திருப்பணிகள் நடந்தது. பணிகள் நிறைவு பெற்று கடந்த 30 தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் துவங்கின. இன்று நான்காம் யாகசாலைப பூஜைகள் முடிவடைந்தன. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கடங்களை மேளதாளங்கள் முழங்க கோயிலை சுற்றி வலம் வந்து கோபுர விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து