மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 16:14 IST
நாமக்கல் ரெட்டிப்பட்டி சக்தி நகரை சேர்ந்தவர் பிரபு. வெல்டிங் பட்டறை நடத்துகிறார். இவரது தாய் மணி வயது 50. கணவனை இழந்தவர். ஒரே மகன் என்பதால் தாய் மேல் அதிக அன்பு கொண்ட பிரபுவுக்கு அம்மாவுக்கு ஒரு கோயில் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இதை நிறைவேற்ற வீட்டின் அருகே 1200 சதுர அடியில் நிலம் வாங்கினார். அதில் 4 பக்கமும் சுவர் எழுப்பி 3 அடி உயரத்தில் அவரது அம்மாவின் சிலையை நிறுவினார். சிலை ரூ. 1.50 லட்சம் மதிப்பில் மார்பிள்ஸ் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. சிலையை ராஜஸ்தானில் இருந்து பிரபு இறக்குமதி செய்துள்ளார். உயிருடன் இருக்கும் தாய்க்கு கோயில் கட்டிய பிரபுவை ஊர் மக்கள் பாராட்டுகின்றனர்.
வாசகர் கருத்து