மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 16:45 IST
சேலம் அஸ்தம்பட்டி, சின்னையா பிள்ளை 7வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. நூல் வியாபாரி. இவரும் இவரது மனைவி மல்லிகாவும் உறவினர் திருமணத்திற்கு சென்று இரவு வீட்டிற்கு வந்து உறங்கியுள்ளனர். இன்று அதிகாலை மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து நகை பெட்டியில் இருந்த நகைகளை திருடினர். படுக்கை அறையில் உறங்கிக் கொண்டிருந்த மல்லிகா சத்தம் கேட்டு எழுந்தார். மல்லிகாவை கண்டதும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். நகைப்பெட்டியில் 50 பவுன் நகை வைத்திருந்ததாகவும் அதனை மர்ம நபர் கொள்ளை அடித்து சென்று விட்டதாக மல்லிகா தெரிவித்துள்ளார் அஸ்தம்பட்டி போலீசில் மல்லிகா அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர்
வாசகர் கருத்து