மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 17:05 IST
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்த பாஜ மாநில தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் 441 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற பனிமய மாதா ஆலயத்திற்கு சென்றார். அவரை பாஜக சிறுபான்மை அணியினர் வரவேற்றனர். ஆலயத்தில் பனிமய மாதாவை வழிபட்டார். பங்கு தந்தை குமார்ராஜா பிரார்த்தனை செய்து புனித நீர் தெளித்து ஆசீர்வதித்தார். ரோஜா மாலை, பட்டாடை மற்றும் மெழுகுவர்த்தியை காணிக்கையாக பனிமயமாதாவிற்கு அண்ணாமலை வழங்கினார். ஆலயத்தில் உள்ள லூர்து அன்னையை வணங்கினார். ஆகஸ்ட் 5 ல் நடைபெறும் பணிமயமாதா திருவிழாவிற்கு வர பாஜ சார்பில் அழைத்தனர். கட்டாயம் வருவதாக தெரிவித்து புறப்பட்டுச் சென்றார்.
வாசகர் கருத்து