மாவட்ட செய்திகள் ஜூன் 01,2023 | 18:37 IST
உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தி வேளாண் பல்கலை சார்பில் சைக்கள் பேரணி நடந்தது. வேளாண் பல்கலையில் நிறுவன நாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதன் ஒரு பகுதியாக உடல் ஆரோக்கியமாக இருக்க சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற நோக்கில், 'பெடல் டூ ஸ்டே பிட்' என்ற தலைப்பில் சைக்கிள் பேரணி நடந்தது. பேரணியை கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் துவக்கி வைத்தார். பல்கலை துணை வேந்தர் கீதாலட்சுமி மற்றும் துறை தலைவர்கள் உடனிருந்தனர். வேளாண் பல்கலையில் துவங்கி, மருதமலை ரோடு பாரதியார் பல்கலை வரை சென்ற பேரணியில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து