மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 12:05 IST
கும்பகோணம் - தஞ்சை சாலையில் தாராசுரம் காய்கறி சந்தை அருகே 2 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில் ஒரு கடையில் நேற்று இரவு 5க்கும் மேற்பட்டவர்கள் கையில் ஆயுதங்களுடன் கடைக்குள் புகுந்து சூப்பர்வைசர் முத்துக்கிருஷ்ணனை மிரட்டியதுடன் கடையில் இருந்த பாட்டில்களையும் அடித்து சேதப்படுத்தினர். முத்துகிருஷ்ண்னன் கிழக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகார் அளித்தார். கடையில் இருந்த சி.சி.டி.வி.காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து தாராசுரத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து பலரை தேடி வருகின்றனர்.
வாசகர் கருத்து