மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 12:34 IST
திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயிலில் பிரம்மோற்சவம் கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8வது நாளில் தேரில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா கோஷமிட்டு வடம் பிடித்து இழுத்தனர். நான்கு மாட விதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். இரவு குதிரை வாகனத்தில் கல்கி அவதாரத்தில் கோவிந்தராஜ சுவாமி எழுந்தருளவுள்ளார். நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் பிரம்மோற்சவம் நிறைவுறுகிறது.
வாசகர் கருத்து