மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 13:06 IST
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே ரெகுநாதபுரத்தில் உள்ள தொழில்நுட்பக் கல்லூரியில், அரசு கல்லுாரி தேர்வுகளின் விடைத்தாள் திருத்தும் பணிக்காக 180 பேராசிரியர்கள் வந்துள்ளனர். இவர்களில் சிலர் கல்லூரியிலேயே தங்கி விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கல்லூரியில் தங்கியுள்ள பெண் ஆசிரியர்களிடம் கல்லூரியில் பணி புரியும் ஒருவர் இரவில் தரக்குறைவாக பேசியுள்ளார் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காலையில் விடைத்தாள் திருத்தும் பணிக்காக வந்த சக ஆசிரியர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாபநாசம் வட்டாட்சியர் பூங்கொடி மற்றும் அய்யம்பேட்டை காவல் ஆய்வாளர் வனிதா ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் போராட்டத்தை கைவிட்டு விடைத்தாள் திருத்தும் பணிக்கு சென்றனர்.
வாசகர் கருத்து