மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 15:58 IST
தஞ்சாவூர் நகரத்தில் இன்று காலை ஹெல்மெட்டுடன் டூவீலர் ஓட்டி வந்த பெண்களை மட்டும் ட்ராபிக் போலீசார் திடீரென நிறுத்தினர். பெண்களுக்கு ட்ராபிக் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் வாழ்த்து சொல்லி வெள்ளி காசு கொடுத்தார். போலீஸ் நிறுத்தியதால் பயந்த பெண்கள், வெள்ளி காசு கிடைத்ததில் மகிழ்ந்தனர். தஞ்சை ஜோதி அறக்கட்டளையினர் விழிப்புணர்வுக்காக இது நடந்தது. ஜோதி அறக்கட்டளை, சில மாதத்துக்கு முன், ஹெல்மெட்டுடன் வாகனம் ஓட்டிய பெண்களுக்கு ஸ்வீட்கொடுத்தது. அடுத்த மாதம், 50 பெண்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் தந்தனர். இப்போது 50 பெண்களுக்கு வெள்ளிக்காசு கொடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து