மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 16:46 IST
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருவங்காடு பகுதியில், ஊட்டி தேசிய நெடுஞ்சாலையோரத்தில் உள்ள டாஸ்மாக் கடை உள்ளது. இன்று மதியம் ஏ.டி.எம். அருகே சாலையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்த காட்டெருமைக்கு, போதை ஆசாமி ஒருவர் பழம் கொடுக்க முயன்றார். முதலில் அமைதியாக இருந்த காட்டெருமை அவரை தாக்க தயாரானது. அப்பகுதி மக்கள் சப்தமிட்டு, போதை ஆசாமியை விரட்டினர். இதனால் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர்தப்பினார். போதை ஆசாமிகளால் நாளுக்கு நாள் தொல்லை அதிகரிப்பதால் டாஸ்மாக் கடையை வேறு இடத்திற்கு மாற்றவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
வாசகர் கருத்து