மாவட்ட செய்திகள் ஜூன் 02,2023 | 17:29 IST
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள தேக்கடி பெரியார் புலிகள் சரணாலாயத்தில் ஏராளமான புலிகள் வாழ்ந்து வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள நீரோடையில் 6 வயது புலியின் சடலம் ஒன்று மிதந்து வந்தது. ரோந்து சென்ற வனத்துறையினர் புலியின் சடலத்தை மீட்டனர். புலியின் கழுத்தில் காயங்கள் இருப்பதையும், உடல் நிலை பாதிக்கப்பட்டிருந்தையும் கண்டறிந்தனர். பின்னர் வனப்பகுதியில் புதைத்தனர்.
வாசகர் கருத்து