மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 12:07 IST
தஞ்சாவூரில், பள்ளிக்கல்வித்துறை சார்பில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு விருதும், 10ம் வகுப்பு, ப்ளஸ் 2 பொதுத்தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற வைத்த ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. விழாவில், கல்விஅமைச்சர் மகேஷ், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் 1,700 பேருக்கு சான்றிதழ்களையும், 150 பேருக்கு ஒளிரும் ஆசிரியர்கள் விருதையும் வழங்கினார். பட்டுக்கோட்டை ஆசிரியை சுமித்ரா, தஞ்சாவூர் அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் குழந்தைசாமி, வரகூர் அரசு பள்ளி, 7ம் வகுப்பு மாணவி மோனிகா எழுதிய நுால்களை அமைச்சர் வெளியிட்டார். பின்னர் நிருபர்களை சந்தித்தார்.
வாசகர் கருத்து