மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 12:21 IST
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம், திருவிடைமருதுார், திருப்பனந்தாள் பகுதிகளில், இரவு, 10:00 மணி முதல் மதியம், 12:00 மணி வரை, சட்டவிரோதமாக மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. திருப்பனந்தாள் பகுதியில் போலீசார் ரோந்து வருவதை கண்காணிக்க, மது விற்கும் கும்பல், ஆன்லைனில் வாங்கிய 'வாக்கி டாக்கி' கருவிகளை பயன்படுத்தினர். போலீசார் வந்தால், மது விற்பனை செய்பவர்களுக்கு, வாக்கி டாக்கி வாயிலாக தகவல் அளித்து தப்பினர். திருவிடைமருதுார் டி.எஸ்.பி., தலைமையில் போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, திருப்பனந்தாள் பகுதி, மண்ணாயாற்று பகுதியில், மது விற்பனை செய்யும் 7 பேர் கும்பல் சிக்கினர்
வாசகர் கருத்து