மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 12:49 IST
ராமநாதபுரம் சிவஞானபுரத்தை சேர்ந்தவர் அசோக்குமர் வயது 28. இவர் அடிதடி வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமீனில் உள்ளார். ராமநாதபுரம் ஜெ எம் 1 வது கோர்ட்டில் கையெழுத்திட்டு வந்தார். இன்று காலை 10.45 மணியளவில் கோர்ட் அலுவலக அறைக்குள் கையெழுத்திட நுழைந்தார். அறைக்குள் நின்ற மர்ம நபர் அசோக்குமாரை சராமாரியாக தலை, கழுத்து, முகுது பகுதிகளில் அரிவாளால் வெட்டி விட்டு தப்பினார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அசோக்குமாரை இராமநாதபுரம் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். டவுன் கேணிக்கரை போலீசார் தப்பியோடியவரை தேடுகி்ன்றனர்.
வாசகர் கருத்து