மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 14:42 IST
விழுப்புரம் அடுத்த சிறுந்தாட்டில் பழமை வாய்ந்த கனகவல்லி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மட்டை தேங்காய் வழிபாடு செய்து திருமணம் நடைபெற்றதால் இந்த கோவிலில் நலனுக்காக கோப்பெருஞ்சிங்கன் என்ற அரசர் 10 ஏக்கர் நிலம் எழுதி வைக்கப்பட்டதாக கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.. தற்போதும் இந்த கோவிலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டை தேங்காய் வழிபாடு நடகிறது. திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் மட்டை தேங்காயை சுவாமியின் காலடியில் வைத்து பூஜை செய்து கோவிலை 4 முறை சுற்றி வந்து வீட்டிற்கு சென்று வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம்.. இன்று சனிக்கிழமை கோவிலில் நடந்த வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
வாசகர் கருத்து