மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 15:32 IST
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹிப்பாடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன் வாரியார். கோவை வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவன மூத்த முதன்மை விஞ்ஞானி. கர்நாடக சங்கீதத்தை முறையாக கற்று பல இசைக்கருவிகளை வாசிப்பவர். இதுவரை, 150க்கும் மேற்பட்ட தனி பாடல்களுக்கு இசையமைத்து தமிழ், மலையாளம், ஹிந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் பாடி இருக்கிறார். இதுவரை 'கலா பிரதீபா' விருதை 5 முறை பெற்றுள்ள கண்ணன் வாரியார், ஒரு சைக்கிள் பிரியர். தினமும், 10 கி.மீ., சைக்களில் பயணிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். சைக்களில் ஹாயாக அலுவலகம் வந்த அவரை, ஆன் தி வேயில் நிறுத்தி பேசியபோது, அனைவரும் இசையை கேட்க வேண்டும். மன அழுத்தத்துக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும், இசை ஒரு நல்ல மருந்து என தெரிவித்தார்.
வாசகர் கருத்து