மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 15:57 IST
மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கடந்த மே 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மாலையில் சிம்ம, அனுமான், கருட, சேஷ, யானை, தங்கச்சிவிகை, பூச்சப்பரம், குதிரை வாகனம் போன்ற பல்வேறு வாகனங்களில் வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் வீதி உலா வந்தார். முக்கிய நிகழ்வான தேரோட்டம் வெகு விமர்சையாக நடைபெற்றது. வியூக சுந்தரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
வாசகர் கருத்து