மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 16:14 IST
திருச்சி அண்ணா நகரில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இரண்டாம் நிலை காவலர் தேர்வில் தேர்ச்சி பெற்ற 371 பெண் காவலர்களுக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கி்யது. பயிற்சி பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி, துணை முதல்வர் மணவாளன் தலைமையில் பெண் போலீசாருக்கு நன்னடத்தை, கவாத்து, துப்பாக்கி சுடுதல், சட்ட வகுப்பு, பொதுமக்களிடம் அணுகுமுறை உள்ளிட்ட பயிற்சிகள் 6 மாதங்களுக்கு வழங்கப்படும். 6 மாத பயிற்சி பின் ஒரு மாத காலம் போலீ்ஸ் ஸ்டேசன்களில் பயிற்சி பெறுவார்கள். பின்னர் பெண் போலீசார் ஸ்டேசனில் பணியில் அமர்த்தபடுவார்கள் என அதிகாரிகள் தெரிவித்தனர். தினசரி காலை மற்றும் மாலை நேரங்களில் மைதானத்திலும் அளிக்கப்படும் பயிற்சிகளில் பெண் போலீசார் கவாத்து பயிற்சியினை மேற்கொண்டனர்.
வாசகர் கருத்து