மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 00:00 IST
சென்னை புழல் மத்திய சிறையில், தண்டனை கைதிகள், தங்களுக்கு தெரிந்த சுயதொழில் அல்லது பல்வேறு வேலைகளை செய்கின்றனர். கைதிகளின் மறுவாழ்விற்கான தொழிற் பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன. அந்த வகையில், 20க்கும் மேற்பட்ட கைதிகள், விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள், 1 ஏக்கர் நிலத்தில் வேர்க்கடலை பயிரிட்டு, பராமரித்து வந்தனர். முதிர்ந்த நிலைக்கு வந்த வேர்க்கடலையை, நேற்று அவர்கள் அறுவடை செய்தனர். சிறை அதிகாரிகள், விவசாய கைதிகளை பாராட்டி உற்சாகப்படுத்தினர்.
வாசகர் கருத்து