சிறப்பு தொகுப்புகள் ஜூன் 03,2023 | 16:19 IST
ஒடிசா விபத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் முழுவதுமாக தடம் புரண்டு சின்னா பின்னம் ஆனது. ஹவுராவில் இருந்து சென்னை நோக்கி வந்த அந்த ரயிலில் பயணம் செய்த சுமார் 1,200 பேரில் 290 பேர் இப்போது உயிருடன் இல்லை. மீதி பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர். பெங்களூரில் இருந்து அதே ஹவுரா நோக்கி சென்ற ரயில் தான் தடம் புரண்ட கோரமண்டல் மீது மோதியது. அதன் 3 பெட்டிகளும் தடம் புரண்டன. ஆனால் அதில் பயணித்த 1,200 பேருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மரண ஓலத்தின் நடுவே திகைத்து நின்ற அவர்களின் மனம் மட்டுமே வலித்தது. மீட்பு வேலைகள் முடிவுக்கு வந்ததால், தடம் புரண்ட பெட்டிகளை அங்கேயே கழற்றி விட்டு விட்டு, ஹவுரா எக்ஸ்பிரஸ் மீண்டும் பயணத்தை தொடர்ந்தது. 10 கிலோ மீட்டர் வேகத்தில் மெதுவாக செல்கிறது.
வாசகர் கருத்து