மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 17:25 IST
ஓசூர் நகர் மையப்பகுதியில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு திடல் உள்ளது. இதற்கு மாநகராட்சி கருணாநிதி விளையாட்டு திடல் என பெயர் சூட்டியுள்ளது. இன்று கருணாநிதி பிறந்தநாள் என்பதால் விளையாட்டு திடல் பெயர் பலகை அலங்கரிக்கப்பட்டிருந்தது. அரசு விளையாட்டு திடலுக்கு கருணாநிதி பெயரை வைக்கக்கூடாது என பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பாஜகவினர் சிலர் கருணாநிதி பெயரை ஸ்பிரேயர் கொண்டு அழித்து, வாழை மரங்களை கீழே சாய்த்தனர். போலீசார் பாஜகவினரை எச்சரித்ததால் பாஜகவினர் போலீசிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்டதை அறிந்த திமுகவினர் மேயர் சத்யா, ஓசூர் எம்எல்ஏ பிரகாஷ் தலைமையில் மைதானத்தில் கூடினர்.
வாசகர் கருத்து