மாவட்ட செய்திகள் ஜூன் 03,2023 | 17:34 IST
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ராஜக்காள்பட்டி கதிர்வேல்புரம் சீனி என்பவரின் மகன் பட்டவராயன்16, வேல்முருகன் மகன் ஞானவேல் 15, ரவி மகன் தமிழரசன் 14 மூவரும் மத்திய பிரதேசத்திற்கு டிபன் கடைக்கு வேலைக்கு சென்றனர். ஆறு மாதமாக பெற்றோரிடம் பேசிக்கொண்டு இருந்தனர். கடந்த ஒரு மாதமாக போன் பேசவில்லை. தேனி எஸ்பி பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் புகார் தெரிவித்தனர். ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா தலைமையில் தனிப்படை அமைத்து மத்திய பிரதேசத்திற்கு சென்றனர். சாகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் மூன்று சிறுவர்களும் இருப்பதை கண்டறிந்து மூன்று போலீசார் சிறுவர்களையும் மீட்டனர். ஆண்டிபட்டி நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் பெற்றோர்களிடம் அனுப்பி வைத்தனர்.
வாசகர் கருத்து